யஜூர் வேதத்தில் இடம் பெற்ற கற்று கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
05:02

''ஒட்டு மொத்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய, களரி, சிறந்த ஊக்கப் பயிற்சியாக அமையும்,'' என்கிறார், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியல் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில்குமார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பழமை வாய்ந்த இக்கலையின் சிறப்பு, யஜூர் வேதத்தின் உபவேதமான தனுர் வேதத்தில், விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கலை, உடலை மட்டுமல்லாமல், உள்ளத்தையும் தெளிவாகவும், ஆரோக்கியமான சிந்தனை கொண்டதாகவும் வைத்து கொண்டது. சூரிய அஸ்தமனத்துக்கு பின், சூரிய உதயத்துக்கு முன், இப்பயிற்சியை மேற்கொள்வர்.பொதுவாக, இப்பயிற்சி தென்மேற்கு திசை நோக்கி செய்யப்படும். தெற்கு உக்கிரம், கோபம் நிறைந்த திசை, மேற்கு அமைதியான திசை என்பதால், அவை இரண்டும் இக்கலையின் வழியாக கலந்து வெளிப்பட, தென்மேற்கு திசை நோக்கி இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில், பூத்தரை என்ற ஏழு கடவுள்களை வணங்கும் முறை, பின், குருத்தரை, நாகத்தரை ஆகிய வழிபாடுகளுக்கு பின் குருவணக்கம் செலுத்திய பின் பயிற்சி தொடங்கப்படும்.இப்பயிற்சி, தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளுக்கும், போதிய பயிற்சி அளிக்கும். குறிப்பாக, சுரப்பி மண்டலங்கள் சரியானபடி வேலை செய்ய துாண்டுகிறது. இதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எந்த வேலையையும் செய்ய தயக்கம், தள்ளிப்போடுதல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. நோய்கள் அண்டாமல், ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வழி ஏற்படுத்தும்.கலைகளின் தாய்பயிற்சியை நான்கு வகையாக பிரிக்கலாம். முதற்கட்டப்பயிற்சி முழுக்க, முழுக்க உடற்பயிற்சியை சார்ந்தது. இதை 'மெய்த்தாரி' என்பர். இரண்டாவது, மரத்தலான ஆயுதங்கள் கொண்டு பயிற்சி பெறுவது, 'கோல்த்தாரை' என்பர். மூன்றாவது கட்டமாக, இரும்பாலான ஆயுதங்களை கொண்டு பயிற்சி பெறுவது 'அங்கத்தாரை' என்று அழைப்பர். நான்காவதாக, 'வெறுங்கை பிரயோகம்' என்பர். இதில், வெறுங்கையுடன் இருக்கும் போது, எதிரிகள் ஆயுதங்களுடன் வந்தால், அதை எப்படி சமாளிப்பது என்பதாகும். கலையை, சண்டை போட பயன்படுத்தாமல், நம் உடல், உள்ளம் செழிப்படையும் என்ற முறையில் கற்றுக் கொள்ள வேண்டும். வடக்கன் களரி, தெக்கன் களரி என்ற இருவகை உண்டு.வடக்கன் களரியை, கேரளாவில் பரசுராமரும், தெக்கன் களரியை தமிழகத்தில் அகஸ்திய முனிவரும் அறிமுகப்படுத்தினர். இக்கலையை, பல்லவர் ஆட்சிக்காலத்தில், போதி தர்மர் சீனாவுக்கு கொண்டு சென்றார். இதனடிப்படையில், 'குங்பூ' உட்பட தற்காப்பு கலைகள் உருவாகின. இதனால் தான் களரியை, தற்காப்பு கலைகளின் தாய் என்றழைக்கிறோம்.சந்ததிக்கு வளம்இக்கலையை, 7 வயதுக்கு மேல், உடலில் திறன் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும், கற்றுக் கொள்ளலாம். பாலின வேறுபாடு இல்லை. இளமையை நல்ல முறையில் தொடர்ந்து பராமரிக்க முடியும். குறிப்பாக, முதுகு தண்டுவடம், நல்ல ஆரோக்கிய முறையில் பாதுகாக்கப்படுவதால், நமது ஒட்டுமொத்த சந்ததி வளம் பெறும். உடலில் உள்ள ஜீன்கள் வலுப்பெறும்.நமது முதுகு தண்டுவடத்தில் சக்கரங்கள் எனப்படும் முக்கியமான தற்காப்பு நரம்புகள் செல்கின்றன. மூலதாரா, சுவாதித்தானா, மளிப்புறா, அனகதா, விசுகதா, அஜ்னை, சகஸ்தாரா என்ற அந்த, 7 வகை சக்கரங்கள் தான், யோகா கலையிலும் சுட்டிக் காட்டப்படுகின்றன. இக்கலையை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்றும் சத்தியம் பெற்ற பின்னே கற்றுத் தரப்படுகிறது.இதில் மொத்தம், 108 வர்ம புள்ளிகள் உள்ளன. இதில் 107, நமது உடலில் உள்ளன. ஒரு புள்ளி 'நோக்கு வர்மம்' எனப்படுவது. அது கண்களினால் ஒருவரை கட்டுப்படுத்துவது. இதை ஒரு வகை ஹிப்பனாடிஸ்சம் எனலாம். இந்த புள்ளிகளை கொண்டு நோய்களை குணப்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.களரிப்பயிற்சியில் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்ற வகையில், உதவி பேராசிரியர் செந்தில்குமாரின் பெயர், 'ஆரஞ்சு வேர்ல்டு ரெக்கார்டு' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X