ஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஜன
2021
11:04
பதிவு செய்த நாள்
ஜன 23,2021 10:27

ஓசூர்: ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ம.பி.,யை சேர்ந்தவர்கள் ஐதராபாத் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் செயல்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று( ஜன.,22) காலை 9: 30 மணிக்கு வாடிக்கையாளர் போல் வந்த ஆறு பேர் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.




இதனிடையே, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சம்சாத்பூர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ம.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள், கத்தி, ரூ.12 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


முதல்வர் பாராட்டு




கொள்ளை குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.18 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த கிருஷ்ணகிரி போலீசாரை பாராட்டுகிறேன். இது காவல்துறையின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-202123:02:33 IST Report Abuse
தமிழவேல் அந்த கும்பலோட பெயரெல்லாம் வெளிவருமா ? பெரிய ஆளும்கட்சி ஆளுங்களாமே..🤔🤔🤔
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்த திருட்டு கட்சி ஆட்களின் பெயரெல்லாம் கூட இன்னமும் வெளிவரவில்லையே....
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
23-ஜன-202118:48:26 IST Report Abuse
jagan இவர்கள் "விக்யான கொள்ளையர்கள்" அல்ல. குடும்பத்தாரிடம் நிறைய படிக்க இருக்கு. இது போல் சிறுபிள்ளை தனமாக மாட்டி கொண்டால், குடுபத்தின் கொள்ளுப்பேரன் கூட இடது காலால் எட்டி உதைப்பான்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
23-ஜன-202117:59:21 IST Report Abuse
தமிழ்வேள் 10 கோடி நகை கொள்ளை 12 கோடி நகை மீட்பு ..வித்தியாச நகை 2 கோடி ஒசூரிலிருந்து ஐதராபாத் போகும் வழியில் கொள்ளையடித்ததா அல்லது அதற்கு முன்பா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X