லண்டனில் வேலை எனக் கூறி ரூ.9 லட்சம் மோசடி: 2 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
14:17

கடலுார்: லண்டனில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 9.17 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58; இவர், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் 18ம் தேதி அளித்த மனு: பண்ருட்டியில் 2015ம் ஆண்டு சுவீட் கடை நடத்தி வந்த போது, கடலுார் கோண்டூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷாவுடன் அறிமுகம் கிடைத்தது.இவர், கோண்டூரைச் சேர்ந்த முனிரா பேகம், அவரது கணவர் முகமது அஜ்மல் கான் ஆகியோர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறினர். அதன்பேரில் நானும், நண்பர்கள் பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், 50; மாளிகைமேடு குமார், 40; ஆகியோர் முனிரா பேகத்தை சந்தித்தோம்.


முனிராபேகம், லண்டனில் உள்ள தனது கணவர் முகமது அஜ்மல்கான் மூலமாக அந்நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறினார். இதனை நம்பி முனிராபேகம், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முகமது அஜ்மல்கான், அன்வர் பாட்ஷா ஆகியோரிடம் பல தவணைகளாக 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ஆனால், வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தினர். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.


எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முனிராபேகம், முகமது அஜ்மல்கான், அன்வர் பாட்ஷா ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். மற்றொரு பண மோசடி வழக்கில் கைதாகி கடலுார் பெண்கள் கிளைச் சிறையில் இருந்த முனிரா பேக்தை கடந்த 20ம் தேதி கைது செய்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் துர்கா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், கோண்டூரில் வீட்டில் பதுங்கியிருந்த அன்வர் பாட்ஷாவை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முகமது அஜ்மல்கானை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X