ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:08

மீஞ்சூர்: ஏரியில் குளிக்கும்போது, ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி, அண்ணன், தங்கை இறந்தனர்.மீஞ்சூர் அடுத்த, செப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தருண், 17, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாம் ஆண்டும், மகள் தேவி, 14, அத்திப்பட்டு உயர்நிலைப் பள்ளயில், 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.நேற்று காலை, அண்ணன், தங்கை இருவரும், அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றவர்கள், தண்ணீரில் மூழ்கி மாயமாயினர். இதை கண்டு, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள், ஏரியில் குதித்து, இருவரையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே அவர்கள் இறந்தது தெரிந்தது.தகவல் அறிந்த, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அண்ணன், தங்கை ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X