கடலுார் : கடலுார் தமிழ்நாடு பிராமணர் சங்க மஞ்சக்குப்பம் கிளை சார்பில், குடியரசு தினவிழாவையொட்டி மாணவ, மாணவியருக்கு ஓவிய போட்டி நடந்தது.
கிளை பொதுச்செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர் மனோகரன் சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்தார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநிலச் செயலாளர் திருமலை பரிசு வழங்கினார்.உறுப்பினர் கோதண்டராமன் நன்றி கூறினார்.