ஐஸ்ஹவுஸ் ; கால் டாக்சி ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகை மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.சென்னை, ராயப்பேட்டை, கோயா அருணகிரி தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா, 40; கால் டாக்சி ஓட்டுனர். இவர், ஏல சீட்டும் நடத்தி வருகிறார்.இரண்டு நாட்களுக்கு முன், கோடம்பாக்கத்தில் உள்ள இவரது மாமியார் இறந்ததால், குடும்பத்துடன் சென்றார். முகமது அப்துல்லாவின் மகன் சையது ஆஷிப், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 30 சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.