கடலுார் : கடலுார் கேப்பர்மலை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் கண்டன உரையாற்றினார்.துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார், கண்ணன், தனசேகரன், மதுசூதனன், இணைச் செயலாளர் பன்னீ்ர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கடலுார் மின்வட்ட ஊழியர்களுக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் நிலுவையில் உள்ள பயணப்படி, இரவு முறைப்பணி படி மற்றும் இரட்டிப்பு ஊதிய துணை சம்பள பட்டியலை அனுமதிக்க வேண்டும்.கடலுார் மின்வட்ட ஊழியர்களுக்கு அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள், மழை கோட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.