மாமல்லபுரம்; மாமல்லபுரத்தில், வார இறுதி கலாசார கலை விழா, நேற்று துவக்கப்பட்டது.தமிழக சுற்றுலாத் துறை, மாமல்லபுரம் மரகத பூங்காவில், சனி, ஞாயிறு நாட்களில், இவ்விழாவை நடத்துகிறது. நேற்றைய துவக்கவிழாவில், வருவாய் கோட்டாட்சியர் செல்வம் துவக்கினார். சுற்றுலா அலுவலர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செங்கல்பட்டு, விநாயகா நாட்டியாலயா, மீனாட்சி ராகவன் குழுவினர், பரதநாட்டியம் மற்றும் திருவண்ணாமலை, ஜீவதீபம் கலை குழுவினர், கிராமிய கலை நிகழ்த்தினர். சுற்றுலாப் பயணியர் கண்டுகளித்தனர்.