விருத்தாசலம் : சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விருத்தாசலம் அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடியில், மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சார்பில் கூட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆய்வாளர்கள் கடலுார் கண்ணன், நல்லதம்பி, விருத்தாசலம் ரவிச்சந்திரன், சிதம்பரம் செல்வம், பண்ருட்டி முருகேசன், நெய்வேலி பிரான்சிஸ் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினர்.தொடர்ந்து, சீட் பெல்ட், ெஹல்மெட் அணிவதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. குறுகிய வளைவுகளில் முந்தக் கூடாது.இரவு நேரங்களில் உரிய ஒளி பிரதிபளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம், சீருடை அணிதல், வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.