புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்., கட்சியினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில் நேற்று ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இளைஞர் காங்., தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.பைக்குகளை சாலையில் படுக்கவைத்து, மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட ரமேஷ் உட்பட 8 பேரை கைது செய்தனர்.