விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில், பி.எஸ்.சி., மற்றும் டி.ஜி.என்.எம்., செவிலியர் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு சவிதா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.முகாமை, கல்லுாரி முதல்வர் பொற்செல்வி வரவேற்று, துவக்கி வைத்தார். மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் ஏஞ்சலின் சுபா, துணை கண்காணிப்பாளர் ரூத் மற்றும் கலைவாணி, சுவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், பங்கேற்ற இறுதியாண்டு மாணவர்கள் 104 பேருக்கு, எழுத்து, செயல்முறை மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.செவிலிய பேராசிரியர் கார்த்தி நன்றி கூறினார்.