வடலுார் : வடலுார் வள்ளலார் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் வரவேற்றார்.வடலுார் இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் கவிதா தேவி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.