பெண்ணாடம் : தாழநல்லுார் இருளர் குடியிருப்புக்கு குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை நடந்தது.
நல்லுார் அடுத்த தாழநல்லுாரில் இருளர் குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இல்லாததால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 2.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. ஊராட்சித் தலைவர் மணிவிளக்கு பழனிவேல் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பணியை துவக்கி வைத்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர் சுப்ரமணியன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் சேகர், தீவளூர் பாலசுப்ரமணியன், தாழநல்லுார் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.