திருக்கோவிலூர் : அம்மன்கொல்லைமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த அம்மன்கொல்லைமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் நடந்தது. சுகாதார ஆய்வாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், கொரோனாவின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள், நோய்த் தொற்று ஏற்பட்டால் அதனை சரி செய்யும் முறைகள் குறித்து மாணவர்களிடையே விளக்கிக் கூறினார்.ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, லட்சுமி, சுஜாதா, சரண்யா நிகழ்ச்சி ஏற்பாடுகளைசெய்தனர்.சுந்தரி நன்றி கூறினார்.