கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேளாண் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர் மற்றும் வேளாண் இயந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சியில் விதை சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் கூட்டுப் பண்ணைய திட்டம் சார்பில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினருக்கு நடந்த வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சியை கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.வேளாண் இணை இயக்குனர் ஜெகன்நாதன், துணை இயக்குனர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்த 160 பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் 15 வேளாண் இயந்திர விற்பனையாளர்கள், இயந்திரங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர்கள் அன்பழகன், பொன்னுராசன், சாமுவேல், தங்கராஜ், குமாரசாமி, புஷ்பராணி, அனுராதா, விஜயலட்சுமி, வனிதா, நடராஜன், ரகுராம், தமிழ்வாணன், கோவிந்தராஜ், வேளாண் பொறியியல் அலுவலர் அழகுவேல், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் வாமலை, உமா, சொர்ணம், சத்யராஜ், சதீஷ், முருகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.