கடலுார் : கடலுாரில் புதிய பஸ் நிலையம் அமையும் இடத்தில் சுற்று வேலி அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
கடலுாரில் இயங்கி வரும் பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால், கடலுார் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே புதிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான 18.58 ஏக்கர் இடம், கடந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தின் எல்லைக்கு சுற்று வேலி அமைக்கும் பணி நேற்று துவங்கியது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில், அமைச்சர் சம்பத் பூமி பூஜையில் பங்கேற்று, சுற்று வேலி அமைக்கும் பணியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, செயற் பொறியாளர் புண்ணியமூர்த்தி, இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.