உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் தனியார் பட்டா நிலங்களில் மரம் வளர்த்த பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.உளுந்துார்பேட்டை வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உயிர்பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் தனியார் பட்டா நிலங்களில் மரம் வளர்த்த பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வனச்சரகர் காதர்பாஷா வரவேற்றார். விழாவிற்கு தலைமை தாங்கிய குமரகுரு எம்.எல்.ஏ., 184 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.நிகழ்ச்சியில் வனவர்கள் சபரிநாத், பிரவீன்குமார், மணி, வனக் காப்பாளர்கள் ராமநாதன், குப்புசாமி, சிவக்குமார், தர்மன், தொண்டு நிறுவன நிர்வாகி திலகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், நகர செயலாளர் துரை, நிர்வாகிகள் பூக்கடை முருகன், எம்.ஜி.ஆர்., மன்ற நகர துணை செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.