ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே உள்ள பள்ளங்களை மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, ஸ்ரீமுஷ்ணம், கள்ளிப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.கொள்முதல் நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள உலர்களம் சிறிதாக இருப்பதால் சீசன் நாட்களில் அருகே உள்ள காலி இடங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பது வழக்கம்.காலியாக உள்ள பகுதி பள்ளமாக இருப்பதால், மழைநீர் தேங்கி மூட்டைகளில் இருக்கும் நெல் மணிகள் முளைக்கத் துவங்கி விடுகின்றன.
எனவே, நெல் கொள்முதல் நிலையம் அருகே உள்ள கிராவல் மண் மேட்டை அகற்றி பள்ளமான இடங்களில் நிரப்ப வேண்டும்.தற்போது கொள்முதல் சீசன் துவங்க இருப்பதால் உடனடியாக நெல் இருப்பு வைக்கப்படும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.