நல்லிருக்கையில் தொடரும் மர்மக்காய்ச்சல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நல்லிருக்கையில் தொடரும் மர்மக்காய்ச்சல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:46

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கையில் கடந்த 10 நாட்களாக 30க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நல்லிருக்கை கண்மாய் பகுதியில் உள்ள கிணறுகளில் வெள்ளநீர் புகுந்துஉள்ளதால், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.ஊரணி நீருடன் குடிநீரும் கலந்துள்ளதால், அதனை குடிக்கும் கிராம மக்கள், மர்ம காய்ச்சலால் அவதியடைந்துள்ளனர்.நல்லிருக்கை கிராம மக்கள் கூறுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்தின் மூலம்இயங்கிவரும் உவர்நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ., பிளான்ட் 8 மாதங்களாக இயங்காமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.



காவிரிநீர் வரத்து 3 ஆண்டுகளாக இப்பகுதியில் இல்லை.மர்ம காய்ச்சல் நாள்தோறும் பெருகி வரும் நிலையில், உத்தரகோசமங்கை வட்டார மருத்துவமனையின் மூலம் பொது மருத்துவ முகாம் அமைத்திடவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X