காரைக்குடி : காரைக்குடி கணேசபுரத்திலுள்ள மாரியம்மன்கோயிலில், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி கணேசபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள முத்துமாரியம்மனுக்குஅணிவிக்கப்பட்டிருந்த 10கிராம் தங்கத் தாலி நேற்றுமுன்தினம் திடீரென மாயமானது. கோயில் டிரஸ்டி பழனியப்பன் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.