சிவகங்கை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர், நர்சு, சுகாதார பணியாளர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'கோவிட் ஷீல்டு' தடுப்பூசி போட்டு வருகின்றனர். 8 நாட்களில் 812 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மார்ச் 24 முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தினர். தொடர்ந்து 9 மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த டாக்டர், நர்சு, மருத்துவ ஊழியர்கள்,சுகாதார அலுவலர்கள் கொரோனா மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இவர்களில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்ட டாக்டர், நர்சு, சுகாதார பணியாளர்உள்ளிட்ட 9928 பேர்களுக்கு தடுப்பூசி போட, இரண்டு கட்டமாக 20700 'டோஸ்' கோவிட் ஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது.
ஜன.,16 முதல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தினமும் 100 பேர் என்ற இலக்கில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.கடந்த 8 நாட்களில் 812 பேர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.தொடர்ந்து மருத்துவ, சுகாதாரத்துறை, மருத்துவ கல்லுாரி டாக்டர், நர்சு, மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.