ராமேஸ்வரம் : பாம்பனில் முன்விரோதத்தில் சிலர் விசைப்படகிற்கு தீ வைத்ததில், படகி எரிந்ததால் ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
ஜன.,22ல் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் கரை திரும்பிய இஸ்ரேல் பாக்கியம் என்பவரது விசைப்படகில் இருந்து மீன்களை இறக்கி விட்டு கடற்கரையில் நிறுத்தினர்.நேற்று அதிகாலை திடீரென படகில் தீ பிடித்து எரிந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.மீனவர்கள் தீயை அணைத்தனர். இதில் படகில் இருந்த மீன்வலைகள், படகின் மரப்பலகைகள், இன்ஜின் உள்ளிட்ட மீன்பிடி தளவாட பொருட்கள் எரிந்தது. மண்டபம் மரைன் போலீசார் விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக சிலர் படகிற்கு தீ வைத்து தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.