பரமக்குடி : நயினார்கோவில், போகலுார் ஒன்றிய கிராமங்களில் 5 மினி கிளினிக் திறக்கப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் முதலுார், கொடிக்குளம், காமன்கோட்டை, பாண்டியூர், பொட்டகவயல் உள்ளிட்ட கிராமங்களில் திறந்து வைத்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் இந்திரா முன்னிலை வகித்தார்.நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வினிதா, போகலுார் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, முதலுார் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், நயினார்கோவில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குப்புச்சாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.