ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சில ஆண்டுகள் வரை ஜனவரியில் பெய்யக்கூடிய இயல்பான மழையளவு 96 மில்லி மீட்டர் ஆகும்.
நடப்பு ஆண்டில் 212 மி.மீ மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட கூடுதல் மழை பொழிவால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் கதிர்கள்மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்து உள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட கற்காத்தகுடி, கருங்குடி பகுதிகளில் சேதமடைந்த நெல் கதிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, சார்பு ஆட்சியர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன், துணை இயக்குனர் சேக் அப்துல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.