திருக்கனுார் : செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீரில் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனுார், சுல்தான்பேட்டைப் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி, சாலையோரம் துணிகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் முகமது அபியுல்லா 12; அதேப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்தார்.இந்நிலையில், தொடர் மழையால் தற்போது நிரம்பியுள்ள செல்லிபட்டு படுகை அணையில் நேற்று தனது தந்தையுடன் குளித்தார். ஆழமான பகுதிக்குச் சென்ற, அபியுல்லா தண்ணீரில் மூழ்கினார். அவரது தந்தை அன்சாரி உடனடியாக அபியுல்லாவை மீட்டு, தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அபியுல்லா இறந்ததாக கூறினார். திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வருவாய்த்துறை மற்றும் போலீசாரின் அலட்சியமே மாணவன் இறப்புக்கு காரணம் என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.