ஆதரவாளர்களுடன் நமச்சிவாயம் திடீர் ஆலோசனை: காங்., கட்சியில் இருந்து விலக முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:27

வில்லியனுார் : 'கட்சியிலும் உரிய மரியாதை இல்லை, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கூட செய்துகொடுக்க முடியவில்லை என்பதால் அமைச்சர் மற்றும்எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்' என, தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.



பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களிடம் இரு இடங்களில் ஆலோசனை நடத்தினார். வில்லியனுாரில் உள்ள அவரது அலுவலகத்தில், இரவு 8:00 மணியளவில் சுல்தான்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் முதலில்தனியாக ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருமித்து, பா.ஜ.,வை தவிர எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து வாணியர் திருமண நிலையத்தில் இரவு 8:30 மணிக்கு துவங்கிய ஆலோசனை கூட்டத்தில், தொகுதியின் பல்வேறு பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



இதில், அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது;காங்., கட்சியில் மாநில தலைவர் பதவி ஏற்றது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். சட்டமன்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தலை சந்தித்து, அதில் அனைத்திலும் கட்சி வெற்றி பெற கடுமையாக உழைத்தோம்.அப்படிபட்ட என்னை கட்சி தலைவர் பதவியில் இருந்து துாக்கினர். கட்சியில் தான் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால், எனது துறைகள் மீதான பணிகளிலும் முதல்வர் தலையிட்டு பல தடைகள் ஏற்படுத்தி வருகிறார். நம்பி வந்தவர்களுக்கு துறையில் பதவி உயர்வோ, ஒரு பணியிட மாற்றமோ கூட என்னால் செய்து கொடுக்கமுடியவில்லை.



கட்சிக்காரர்களுக்கும், தொகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியவில்லை. இதனால் கட்சியில் இருந்து வெளியேறலாம் என முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகலாம் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது ஆதரவாளர்கள், 'வேண்டாம்' என கோஷமிட்டனர்.'விரைவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாமா' என கேட்டார்.அதற்கு, அனைவரும் ஒப்புக்கொண்டு 'உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என கோஷமிட்டனர். அதையடுத்து, ஆதரவாளர்கள் கூட்டம் அரைமணி நேரத்தில் முடிந்தது.



கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், 'ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை ஏன்' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்''என்றார். 'நீங்கள் பா.ஜ.வுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, 'இதுவரை அதுபோன்ற நிலைப்பாடு இல்லை' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X