சிதம்பரத்தில் பிரசார பயணம் | கடலூர் செய்திகள் | Dinamalar
சிதம்பரத்தில் பிரசார பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:34

சிதம்பரம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாக வாகன பிரசார பயணம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.



ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு சதீஷ் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் துவக்கி வைத்தார். நகர தலைவர் ராஜராஜன், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து கீரப்பாளையம், புவனகிரி வழியாக பரங்கிப்பேட்டை வரை பிரசார பயணம் சென்று அங்கு நிறைவு செய்யப்பட்டது. பிரசாரத்தில் வேளாண் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X