பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை, வாத்தியாப்பள்ளி பள்ளிவாசல் உள்ளே இருக்கும் உயர் மின் அழுத்த மின் கம்பம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என பாண்டியன் எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
பரங்கிப்பேட்டை, வாத்தியாப்பள்ளி தெரு, கொள்ளுமேடு, டில்லி சாகிப் தர்கா தெரு உள்ளிட்ட பகுதிகளை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். அப்போது, வாத்தியாப்பள்ளி பள்ளிவாசலில் உள்ளே இருக்கும் உயர் மின்னழுத்த மின் கம்பத்தை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, மின் கம்பம் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.மேலும், டில்லி சாகிப் தர்கா தெருவில் சாலை வசதி, கொள்ளுமேடு பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் ஐக்கிய ஜமா அத் தலைவர் செய்யது ஆரீப், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், செயல் அலுவலர் சீனிவாசன், சேர்மன் கருணாநிதி, நகர செயலாளர் மாரிமுத்து, மீனவரணி செயலாளர் வீராசாமி, அப்துல் காதர் மரைக்காயர், சுல்தான் அப்துல் காதர், மொகைதீன் அப்துல் காதர், நசுருதீன், பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீது, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், நிர்வாகிகள் மலைமோகன், இக்பால், ஜெய்சங்கர், ராஜேஷ் துகார், சிவக்குமார், நாகராஜ் உடனிருந்தனர்.