4 மீனவர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:51

புதுக்கோட்டை:இலங்கையில் இருந்து வந்த தமிழக மீனவர்கள் உடலுக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திலிருந்து, கடந்த 18ம் தேதி அதிகாலையில், 214 விசைப்படகுகளில், 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைஅவர்களில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு, 50, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த மெசியா, 30, நாகராஜ், 52, சாம், 28, செந்தில்குமார், 32, ஆகிய மீனவர்கள் சென்றனர்.



நடுக்கடலில், இலங்கை கடற்படை தாக்குதலில், நான்கு மீனவர்களும் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை, யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, நேற்று காலை, சர்வதேச கடல் எல்லையில், இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு, நேற்று பிற்பகல், 3:00 மணியளவில், மீனவர்களின் உடல்கள் வந்தன.



சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீனவர்கள் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். மீனவர்களின் குடும்பத்தினருக்கும், ஆறுதல் தெரிவித்தார்.நிவாரண நிதிபின், நான்கு மீனவர்களின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு, தனித்தனியாக ஆம்புலன்சில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



இதற்கிடையில், மீனவர்களின் குடும்பத்தாருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வழங்கவும், தகுதி அடிப்படையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும், பாதிப்படைந்த விசைப்படகிற்கு நிவாரணம் வழங்கவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X