மதுரை:கடிக்க வந்த நாயை, ஆள் வைத்து அடித்துக் கொன்ற, 'காஸ்' கம்பெனி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை, கோச்சடை சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் முத்து சரவணன், 35; செல்லுார் பகுதியில் காஸ் கம்பெனி மேலாளராக உள்ளார். தினமும் வேலைக்கு வரும்போது, தெரு நாய் ஒன்று அடிக்கடி கடிக்க வந்தது.ஆத்திரமடைந்த முத்துசரவணன், நாயை கொல்ல திட்டமிட்டு, செல்லுார் கணேசபுரம் விமல்ராஜ், 35, என்பவரிடம், 500 ரூபாய் கொடுத்தார்.
ஜன., 21ல் நாயை, அவர் கட்டையால் அடித்து கொன்றார். இதை ஒருவர், 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.இதை பார்த்த முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை போலீசாருக்கு உத்தரவிட்டனர். முத்து சரவணன், விமல்ராஜை போலீசார் கைது செய்தனர்.விமல்ராஜ் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தான் சிறையில் இருந்து, ஜாமினில் வந்தார்.