இலங்கை வீரர்கள் கொன்ற
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:54

ராமேஸ்வரம்:கடலில் இலங்கை கடற்படை வீரர்களால் கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் நேற்று சொந்தஊர் கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக்கோரி ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து ஜன.,18ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மெசியா, சாம், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து, படகை மூழ்கடித்தனர். 4 மீனவர்களையும் வீரர்கள் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தனர் என தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.



நேற்று இலங்கையில் பிரேத பரிசோதனை செய்த பின் நம் கடலோர காவல் படை பாதுகாப்புடன் விசைப்படகில் 4 பேரின் உடல் கோட்டைபட்டினம் கடற்கரை வந்தது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்ட சாம், நாகராஜ், செந்தில்குமார் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



தங்கச்சிமடத்திற்கு மெசியா உடல் வந்ததும் மீனவர்கள் வாங்க மறுத்தனர். கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி அமரர் ஊர்தியில் உடல் இருந்தபடி ராமேஸ்வரம், மதுரை தேசிய சாலையில் ஏராளமான மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக் சமரச பேச்சு நடத்தியதும், மறியல் வாபஸ் ஆனது.



முன்னதாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச்சாலை சந்திப்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி.,கார்த்திக் அஞ்சலி செலுத்தினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X