'தொழில்முனைவோராக மாறுங்கள்!' மாணவர்களுக்கு வல்லுனர் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:03

திருப்பூர்:'மாணவர்கள், எதிர்கால தொழில்முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும்,' என, அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி பேசினார்.திருப்பூர், முதலிபாளையம் 'டெக்கிக்' வளாகத்தில், ஆயத்த ஆடை துறைக்கான அடல் இன்குபேஷன் மையம் இயங்குகிறது. இம்மையம், தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, புதுமையான ஆடைகள்; தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது; ஆடை உற்பத்தி சார்ந்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க வழிகாட்டி வருகிறது.இம்மையத்துடன், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பல்கலை கழகங்கள், கல்லுாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாற, இன்குபேஷன் மையம் உதவுகிறது.புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம், நேற்றுமுன்தினம் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது.இதில், இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி பேசியதாவது:மாணவர்கள், ஏராளமான ஆய்வறிக்கைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதன் மூலம், புதுமையான பொருட்களை உருவாக்க முடியும். ஏதேனும் ஒரு துறைசார்ந்த பிரச்னைகளை கண்டறிய வேண்டும்; அந்த பிரச்னைக்கான தீர்வு என்ன என்பதை அலசி ஆராய வேண்டும்.அதனடிப்படையில், புதிய பொருட்களை வடிவமைப்பதன் மூலம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கலாம்.ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி வழங்க, ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள் ளன. வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள், எதிர்காலத்தில், புதுமைகளை புகுத்தும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை செயல்படுத்தும், சிறந்த தொழில்முனைவோராக மாற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, வல்லுனர்கள் பங்கேற்று, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். திருப்பூர், கோவை உட்பட பல்வேறு பகுதி கல்லுாரி மாணவர்கள், 30 பேர், கருத்தரங்கில் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X