பல்லடம்:பசுமையை ஏற்படுத்துதல், மழைநீர் சேகரித்தல், மரம் வளர்த்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் பல்லடம் வனம் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.சமூக பணிகளில் ஈடுபட்டுவரும் வனம் அமைப்பின் 'வனாலயம்' அலுவலகம், பெரும்பாளி அருகே செயல்பட்டு வருகிறது. ஆறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இவ்வமைப்பின் ஐம்பெரும் விழா வரும் 28ல் நடக்க உள்ளது.இதன், முக்கிய அம்சமாக அடிகளார் அரங்கம் திறப்பு விழா செய்யப்படுகிறது. சர்வதேச தரத்துடன் கூடிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த அரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. வனம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் இதில் நடத்தப்படும்.செயலாளர் சுந்தரராஜ் கூறுகையில், 'ஐம்பெரும் விழாவின் முக்கிய நிகழ்வாக அடிக்களார் அரங்க திறப்பு விழா உள்ளது. வரன்பாளையம் மவுன சிவாசல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடக்கிறது,' என்றார்.