திண்டுக்கல் : காந்திகிராம பல்கலை மற்றும் முருகப்பா குழுமம் இணைந்து தொழிற் பயிற்சிக்கான தேர்வை நாளை நடத்துகின்றனர்.
பல்கலை வெள்ளிவிழா அரங்கில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இத்தேர்வில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற 15 வயது முதல் 18 வயது மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.தகுதி பெற்றவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழிற் பயிற்சி வழங்கப்பட உள்ளது. எலக்ட்ரீசியன், டர்னர், மெக்கானிக், பிட்டர் உள்ளிட்ட 9 வகை தொழிற் பயிற்சிகள் ஓசூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள முருகப்பா குழுமத்தின் மையத்தில் நடைபெறும். பயிற்சியின்போது ஆண், பெண்களுக்கு தனிவிடுதி, சீருடை, காலணி, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு நாளன்று மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 2 போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். விவரங்களுக்கு 94884 85073 ல் பேசலாம்.