கூட்டத்தில், முக கவசம் அணியாமல் பங்கேற்ற ஒன்றிய குழு கவுன்சிலர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:07

பல்லடம்:ஒன்றிய குழு கூட்டத்தில், முக கவசம் அணியாமல், கவுன்சிலர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம் ஒன்றியக்குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் கந்தசாமி, குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்ட விவாதம்:மகாலிங்கம் (காங்.,) : வேளாண் துறை சார்ந்த மானியங்கள், திட்டங்கள் குறித்து கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை.கந்தசாமி (பி.டி.ஓ.,) : வேளாண் துறைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.சின்னக்கண்ணு (உதவி தொடக்கக் கல்வி அலுவலர்) : ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேதமடைந்த சத்துணவு கூடங்கள், வகுப்பறைகளை இடிக்க வேண்டும்.பி.டி.ஓ.,: இது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பொறியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரவி (ம.தி.மு.க.,) : வீட்டுமனை வரன்முறைபடுத்துவதில் குளறுபடி உள்ளது. பல்லடத்தில் மட்டும் புதிய விதி முறை கடைபிடிக்கப்படுகிறதா?குருவம்மாள் (பி.டி.ஓ.,): டி.டி.சி.பி., அலுவலக விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தரப்படுகிறது. வீட்டுமனைகள் விதிமுறைகளின்படி இருந்தால் அங்கீகாரம் வழங்கப்படும்.சுடர்விழி (வட்டார மருத்துவ அலுவலர்): கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.


மாதம் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இருந்தும், அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கூட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதால் இது பாதுகாப்பானது அல்ல.இவ்வாறு, மருத்துவ அலுவலர் சுட்டிக்காட்டியும், ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட உறுப்பினர்கள் சிலர், கடைசிவரை முகக்கவசம் அணியவில்லை.பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றியக்குழு நிர்வாகிகள், அதிகாரி சுட்டிக்காட்டிய பின்னும் முக கவசம் அணியாமல், அலட்சியத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இது கூட்டத்தில் பங்கேற்ற பலரையும் அதிருப்தி அடைய செய்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X