திருப்பூர்:மாணவர்களின் உடல் வெப்பநிலை அதிகமாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும், சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூரில் கடந்த 21ம் தேதி ஒரே அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள், உடல் சோர்வு, தலைவலி உள்ள அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனே கொரோனா டெஸ்ட் எடுத்து, இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று வெளியான டெஸ்ட் முடிவில், 'நெகட்டிவ்' வந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து, 14 நட்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதவாது:மாணவர்களுக்கு காலையில் அதிக வெப்பநிலை இருந்துள்ளது. பள்ளிக்கு வரும்போது, குறைந்துள்ளது. பின் மதிய வேளையில் மிக சோர்வாக இருந்துள்ளனர். வகுப்பாசிரியர் விசாரிக்கையில் தலைவலி இருப்பதாக சொல்ல, உடனே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேபோல், மாணவர்கள் காய்ச்சல் இருமல், சளி, உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். பள்ளிகளும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மாணவர்களுக்கென பதிவேடு பராமரிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பது உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.