அரசு சுவரா... 'அரசியல்' சுவரா! போஸ்டரால் அலங்கோலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:09

பல்லடம்:பல்லடத்தில் தாலுகா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, நெடுஞ்சாலை என, பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன.அரசு அலுவலக சுற்று சுவர்களில் விளம்பரம் எழுதவோ, போஸ்டர்கள் ஒட்டவோ அனுமதி கிடையாது. ஆனால், பல்லடத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலக சுவர்கள் அரசியல் விளம்பரங்களுக்கான சுவர்களாக மாறி வருகின்றன.தாலுகா அலுவலகம், கருவூலம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலுவலகம், அரசு பள்ளிகள் என, பெரும்பாலான இடங்களை அரசியல் கட்சிகள் தங்கள் விளம்பரத்துக்கான இடமாக மாற்றியுள்ளனர். அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், வால் போஸ்டர்கள், சினிமா போஸ்டர்கள் என, அனைத்துக்கும் அரசு அலுவலக சுவர்களே பிரதான இடமாக உள்ளன.அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், முன்பதிவு செய்து அரசியல் கட்சிகள் விளம்பரம் தேடி வருகின்றன. இதனால், அரசு அலுவலக சுவரா அல்லது அரசியல் சுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X