திருப்பூர்:விவசாயிகளுக்கு ஆதரவாக டாக்டர்கள் பங்கேற்கும் டூவீலர் ஊர்வலம் நடக்க உள்ளது.பல்லடம் கிழக்கு ஒன்றிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும், 26 ம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, 100 டாக்டர், 500 டூவீலர்களில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.