அபாய நிலையில் குடிநீர் தொட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:13

பொங்கலுார்: பொங்கலூர் ஒன்றியம், நாகலிங்கபுரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் துாண்களில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை மற்றும் நடுநிலைப்பள்ளி அருகில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், இடிந்து விழுந்தால், அசம்பாவிதம் ஏற்படும். எனவே, தொட்டியை இடித்து, புதியதாக கட்ட வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மாணவருக்கு பரிசோதனைவெள்ளகோவில்: முத்துார், அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு காய்ச்சல், சளி பரிசோதனை நடத்தப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜலட்சுமி உட்பட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். வைட்டமின் 'சி' மற்றும் 'ஜிங்க்' மாத்திரை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.துறை ஒருங்கிணைப்பு கூட்டம்அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மட்டத்திலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரசரத்குமார்,பி.டி.ஓ., ஹரிஹரன் முன்னிலை வகித்தனர். அனைத்து ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வருவாய்த்துறை, சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், கிராம ஊராட்சிகளில் உள்ள குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.குப்பை கழிவு அகற்றலாமே!வெள்ளகோவில்: முத்துார் ரோடு, மணியகாரர் பேட்டை அருகே தார் சாலை முழுவதும் குப்பை கழிவுகள் ஆக்கிரமிப்பால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில், தனியார் பள்ளி செயல்படுகிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், சாலையில் கொட்டப்பட்ட கழிவுகள் சாலை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. சுற்றித்திரியும் நாய்களும், குப்பையை ரோட்டில் இழுத்து தள்ளியுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், உடனே குப்பையை அகற்ற வேண்டும்.பாதுகாப்பு விழிப்புணர்வுதிருப்பூர்: சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு திருப்பூர் நகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மாநகர போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். அவ்வகையில், நேற்று பி.என்., ரோடு, சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் கொடி செல்வம், வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாண்டியராஜ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.மாணவிக்கு கலெக்டர் பாராட்டுதிருப்பூர்: கடந்த நவ., மாதம், இந்திய யூத் யோகா பெடரேஷன் மற்றும் ஸ்ரீலங்கா யூத் யோகா பெடரேஷன் சார்பில் ஆன்லைன் யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். பிரன்ட்லைன் பள்ளி, 3ம் வகுப்பு மாணவி சம்யுக்தா, யோகா நட்சத்திர விருது வென்றார். இவரை, கலெக்டர் விஜயகார்த்திகேயன், பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாணவிக்கு பள்ளி நிர்வாகிகளும் பாராட்டு ெதரிவித்தனர்.ரயில்களின் சேவை நீட்டிப்புதிருப்பூர்: 12 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் இறுதி, ஏப்ரல் துவக்கம் வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கொச்சுவேலி - இந்துார் சிறப்பு ரயில், மார்ச் 29 வரை. ராமேஸ்வரம் - ஓகோ, திருநெல்வேலி - பிலாஸ்பூர், மார்ச் 30 வரை, திருநெல்வேலி - தாதர், கொச்சுவேலி - மைசூரு ஏப்., 1 வரை. கோவை - நிஜாமுதீன், மார்ச் 31 வரை ஆறு ரயில்கள், மறுமார்க்கமாக இயங்கும், ஆறு ரயில்கள் என, 12 ரயில்களின் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.தே.மு.தி.க., தேர்தல் ஆலோசனைஅவிநாசி: அவிநாசி தொகுதி தே.மு.தி.க., புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் பிரசாத் குமார் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தார். தலைமை கழக துணை செயலாளர் பார்த்தசாரதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்துரு பேசினர். மாவட்ட நிர்வாகி வேலுசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நன்றி கூறினார்.எம்ப்ராய்டரி சங்க கூட்டம்திருப்பூர்: மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, எம்ப்ராய்டரி கட்டணத்தை உயர்த்த நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். திருப்பூர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன் செயற்குழு கூட்டம் நடந்தது. வரும் 29ம் தேதி சிறப்பு பொதுக் குழு கூட்டம், காயத்ரி ஓட்டலில் நடக்கிறது. எம்ப்ராய்டரி மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எம்ப்ராய்டரி கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X