சென்னை:தொழிலாளர் உரிமத்திற்கு லஞ்சம் பெற்ற, மதுரை மண்டல, தொழிலாளர் நலத்துறை கமிஷனரை, சி.பி.ஐ., அதிகாரிகள், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மண்டல, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் சிவராஜன். இவரிடம், கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம், தொழிலாளர் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளது.அதற்கான உரிமம் அளிக்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அந்நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.ஐ., அதிகாரிகள், சிவராஜனை பொறி வைத்து பிடித்தனர். அவரை, சென்னை சாஸ்திரி பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.மேலும், சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.