திருப்பூர்:திருப்பூர் கூட்ெஷட்டில் கழிப்பிடம் இல்லாததால், தொழிலாளர்கள் அவஸ்தைப்படுகின்றனர்.சரக்கு ரயிலில் வரும் சரக்குகளை இறக்க, லாரிகளில் ஏற்ற, 300 தொழிலாளர்கள் திருப்பூர் கூட்ஸ்ெஷட்டில் பணிபுரிகின்றனர். இவர்களில், 50 பேர் பெண்கள். அடிப்படை வசதிக்காக இரு இடங்களில் கழிப்பிட வசதி இருபாலருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், முழுமையான தண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லை.இதனால், பயன்படுத்த முடிவதில்லை. சிலர் அசுத்தம் செய்து வைப்பதால், கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பெண் தொழிலாளர்கள் இருப்பதால், தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. ரயில்வே நிர்வாகம் கழிப்பிடங்களுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.