'ஒரே வருஷத்துல, 1330 குறளும் கத்துக்கலாம்!' குறளை கரைத்து குடித்தவரின் நம்பிக்கை 'குரல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:20

திருப்பூர், வேலம்பாளையம் -சோளிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன், 59. பி.யு.சி., வரை படித்திருக்கும் இவர், கட்டுமானத்தொழில் செய்து வருகிறார். திருக்குறள் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், 1330 திருக்குறளையும் கரைத்து குடித்துள்ளார். திருக்குறள் பற்றி எந்தவகையில் கேள்வி கேட்டாலும், 'சட்'டென பதில் சொல்கிறார். ஒரு மணி நேரத்தில், அனைத்து குறள்களையும் விளக்கத்துடன் சொல்லி அசத்துகிறார்.அவர் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்...சரியாக, 20 வருடங்களுக்கு முன், என் மகனை திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டிக்கு தயார்ப்படுத்தும்போது எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு குறளையும் அதிகாரத்தோடு தொடர்புபடுத்தி எப்படியெல்லாம் நினைவில் வைக்கலாம்னு பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். மகன் படித்த அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் கொடுத்த உந்துதலால் திருக்குறள் மீதான பற்று அதிகமானது.பனியன் கம்பெனியில் வேலைபார்த்தபடியே, தொடர்ந்து, ஆறு மாதங்கள், விடாப்பிடியாக, 1330 குறளையும், அதன் பொருளையும் மனப்பாடம் செய்தேன். குறள் எண், பொருள், தலைகீழாக, உதடு ஒட்டும், ஒட்டாத குறள், மலர்களின் பெயர் வரும் குறள், உடல் உறுப்புகள், பத்து வரை எண்கள் கொண்ட குறள் என, 35 வகையான கேள்விகளை கேட்டால் உடனே பதில் கூறுவேன்.என்னால், 450 குறள்களை ஆங்கிலத்திலும் சொல்ல முடியும். பள்ளிகள், பொது நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் என்னை அழைத்து பேச வைக்கின்றனர். மாணவர்கள் கேட்கும் எண்ணிற்கான குறளை சொல்வதால் உற்சாகமடைகின்றனர். திருக்குறளை மனதில் பதிய வைத்தது முதல் என் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.திருக்குறள் என் வாழ்வையே அர்த்தமாக்கியுள்ளது. அதன் கருத்துகளை என் வாழ்விலும் பின்பற்றுகிறேன். பல குழந்தைகள் என்னிடம் திருக்குறள் பயில வருகின்றனர். குழந்தைகள் ஒருநாளைக்கு, 5 குறள் வீதமும், பெரியவர்கள், 10 குறள் வீதமும் எழுதி வைத்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒரு வருடத்திற்குள், அனைத்து குறளையும் கற்க முடியும்.வான்புகழ் வள்ளுவன் அறக்கட்டளை விருது, 'நற்குரல் நாயகன்' விருது, 'திருக்குறள் செம்மல்' விருதுகள் வாங்கியுள்ளேன். நுாற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியுள்ளேன். பெங்களூரில் தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்க சென்ற போது அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் என்னை பாராட்டி, 'திருக்குறள் மூலம் அறிவு தீபம் ஏற்றும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்' என திருக்குறள் புத்தகத்தில் எழுதிக்கொடுத்தது மறக்க முடியாது.உங்களுக்கு பிடித்த குறள் எதுவென கேட்டோம்..'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.' நம் மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி எடுத்தால் அதுவே பெருமையைத்தேடி தரும். நான் தளர்ந்தபோதும் உத்வேகம் அளித்தது இந்த குறளே' என விடைபெற்றார்!

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X