மேட்டூர்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணைக்கு, நேற்று வினாடிக்கு, 1,356 கன அடி நீர் வந்தது.
டெல்டா மாவட்டங்களில், மழை தீவிரம் அடைந்ததால், வினாடிக்கு, 2,000 கன அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்திறப்பு, கடந்த, 4ல் நிறுத்தப்பட்டு, குடிநீருக்கு, 500 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. மழை தீவிரம் குறைந்து, பாசன நீர் தேவை அதிகரித்ததால், மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று காலை, 9:00 மணி முதல், வினாடிக்கு, 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 105.96 அடியாக இருந்தது.