பொங்கலுார்:பொங்கலுார், முத்துாரை சேர்ந்தவர் முத்துசாமி, 60. இவர் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரண்டு வாளியில் தண்ணீர் ஊற்றி, ஒரு வாளியில் இரண்டு மாடுகளுக்கும், மற்றொரு வாளியில் ஒரு மாட்டுக்கும் குடிப்பதற்கு தண்ணீர் வைத்துள்ளார்.ஒரே வாளியில் தண்ணீர் குடித்த இரண்டு பசுமாடுகள் இறந்தது, குறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.