மகசூல் அதிகரிக்க 'அடர் நடவு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:29

பல்லடம்;மகசூல் அதிகரிக்க, செடிகளை அடர் நடவு செய்யலாம், என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராஜலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வாழை, மா, நெல்லி, சப்போட்டா, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்கள் பரவலாக பயிரிடப் படுகின்றன.விவசாயிகள் குறைந்த மகசூல் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் அதிக இடைவெளியில் நடுவதும் ஒரு காரணமாகும். குறிப்பிட்ட பரப்பளவில் அதிகபட்ச செடிகளை நடவு செய்து மண் வளம் கெடாமல் லாபத்தை கூட்ட முடியும்.இதற்கு உயர் அடர் நடவு என்று பெயர். குட்டையாக வளரும் ரகங்கள் உயர் அடர் நடவு முறைக்கு சிறந்தது. செடி வடிவமைத்தல், கவாத்து செய்தல் இதில் அவசியம்.உயர் அடர் நடவு முறையால் மண் வளம் நன்கு பயன்படுத்தப்படுவதுடன், மகசூல் அதிகரித்து தரமான பழங்கள் கிடைக்கின்றன.சூரிய ஒளி சேர்க்கை அதிக அளவில் நடக்கிறது. சொட்டுநீர், உரப்பாசனம், எந்திரங்களை உபயோகித்து நல்ல லாபம் எடுக்கலாம். விரைவில் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு பல்வேறு பயன்கள் உள்ள உயர் அடர் நடவு முறை குறித்து மேலும் தெரிந்துகொள்ள பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X