24 லட்சம் பக்க குற்ற நகல் எடுக்க... 50 லட்சம் ரூபாய் வேண்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:41

கோவை:பைன் பியூச்சர் மோசடி வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட 48 பேருக்கு, 24 லட்சம் பக்ககுற்றப்பத்திரிகை நகல் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவதென விழிக்கும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அரசிடம் நிதியுதவி கேட்க முடிவு செய்துள்ளனர்.


கோவையில் செயல்பட்டு வந்த, 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 20,000க்கும் மேற்பட்டோரிடம், சுமார் 818 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பங்குதாரர்கள் செந்தில்குமார்,45, விவேக், 35, நித்யானந்தம், 30, மேலாளர் சத்யலட்சுமி,30, ஆகியோர், 2013ல் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பொருளாதார குற்றப்பரிவு போலீசார், கோவை டான்பிட் கோர்ட்டில், முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.ஏஜன்டுகளையும் விடாதீங்க!பைன் பியூச்சர் நிதி நிறுவனத்துக்கு, பணம் வசூல் செய்து கொடுத்த, ஏஜன்டுகளை வழக்கில் சேர்க்காமல், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக, போலீசார் செயல்படுவதாக கோர்ட்டில் புகார் செய்தனர்.


ஏஜன்டுகளையும் வழக்கில் சேர்க்க கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவின் பேரில்,43 ஏஜ'ன்டுகள் உட்பட 48 பேர் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், சாட்சி விசாரணை துவங்கப்படவில்லை.ஜெராக்ஸ்க்கு ரூ.50 லட்சம்! குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும், 50 ஆயிரம் பக்கம் வீதம்,குற்றம் சுமத்தப்பட்ட, 48 பேருக்கு 24 லட்சம் பக்கத்திற்கு மேல் குற்றப்பத்திரிகை நகல் எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என, போலீசார் உத்தேசமாக கணக்கிட்டுள்ளனர்.இதற்கு பொருளாதார குற்றப்பிரிவில், போதிய நிதி இல்லை. எனவே அரசிடம் சிறப்பு நிதி பெற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுத உள்ளனர்.இவ்வழக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால், விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.


முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஆறு ஆண்டுக்கு பிறகு தான், இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது, நகல் எடுப்பதற்கு அரசு நிதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.நிதி கிடைத்த பிறகு,குற்றப்பத்திரிகை நகல் எடுப்பதற்கு பல மாதங்கள் பிடிக்கும். 48 பேருக்கும் நகல் கொடுத்த பிறகு தான், முறைப்படி சாட்சி விசாரணை துவங்கப்படும்.இவ்வழக்கில், 20,000க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க, இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X