கடலுார் : கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள சுசூகி ஏ.பி.பி., மோட்டார்ஸ் ஷோரூமில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுசூகி பைக் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். உரிமையாளர் வள்ளி புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மண்டல மேலாளர் சுரேஷ் மகாதேவன், சுசூகி பைக்குகளுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பகுதியை திறந்து வைத்தார்.பின்னர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஷோரூமுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.பொது மேலாளர் விநாயகமுருகன், கிளை மேலாளர் நவின்ராஜ், விற்பனைக்குழுத் தலைவர் தினேஷ் தீனா மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.