கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில் திறந்தவெளி மற்றும் தொலைநிலை கல்விக்கான பட்டமளிப்பு விழா, நேற்று பல்கலையில் நடந்தது.இதில் திறந்தவெளி மற்றும்தொலைதுார கல்வி இயக்கக இயக்குனர் ஆனந்தன் வரவேற்றார். பல்கலை துணைவேந்தர், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக முன்னாள் இயக்குனர் ரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், ராமச்சந்திர ராவ் எனும் 83 வயது முதியவர் ஒருவர் பட்டம் பெற தகுதி பெற்றார். அவருக்கு பதிலாக, அவரது பேரன் பங்கேற்று பட்டம் பெற்றார். முதியவரின் கற்கும் ஆர்வத்தினையும், ஈடுபாட்டினையும் துணைவேந்தர் வெகுவாக பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சூரியநாதசுந்தரம், தமிழ்நாடு இடு பொருள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மோகன் மற்றும் சத்திய மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற 322 பேரில், 14 பேர் வேளாண் இடு பொருள் பட்டயப்படிப்பிலும், இருவர் முதுகலை பண்ணை தொழில் நுட்பத்திலும், மேலும் இருவர் முதுநிலை பண்ணை அறிவியல் பாடப்பிரிவிலும், முதன்மை மாணவர்களுக்கான பட்டங்களை பெற்றனர்.