மதுக்கரை:மதுக்கரையில் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.மதுக்கரையில், மட்டப்பாறை தோட்டம், காந்தி நகரிலுள்ள தமிழன்னை வீதி பகுதிகளில், நேற்று முன்தினம் வந்த ஒரு சிறுத்தை, மூன்று ஆடுகளை கடித்து கொன்றது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.மதுக்கரை வன சரகர் சீனிவாசன் கூறியதாவது:சிறுத்தையை பிடிக்க மட்டப்பாறை தோட்டத்தில், கண்காணிப்பு ேகமிராவுடன், கூண்டு வைக்கப்பட்டுள்ளது. வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என, 15 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். வனப்பகுதிக்குள் மக்கள் செல்லக்கூடாது. இரவு நேரத்தில், டார்ச் லைட்டுடன் வெளியே செல்வது நல்லது. வீட்டின் முன் தூங்க கூடாது. வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை கூண்டு,பட்டி அமைத்து வளர்க்க வேண்டும்.இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.