மீண்டும் துளிர்க்கும் 'கட்-அவுட்' கலாசாரம்! ஊரெல்லாம் 'பிளக்ஸ்'களால் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2021
02:52
பதிவு செய்த நாள்
ஜன 24,2021 02:51

கோவை:கோவையில், முதல்வர் பழனிசாமி நேற்று பிரசாரம் செய்த இடங்களில், ரோட்டின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், ரோட்டை தோண்டி கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. ஆளுயர 'கட்-அவுட்' கலாசாரம் மீண்டும் துளிர்த்துள்ளதால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.இரு நாள் பயணமாக, கோவை வந்துள்ள முதல்வர் பழனிசாமி, ராஜவீதியில் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.


அவர் பயணித்த வழித்தடங்களில், ரோட்டின் இருபுறமும் ரோட்டை தோண்டி, உருட்டுக்கட்டைகளை ஊன்றி பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்களில் வட்ட வடிவிலான பிளக்ஸ்கள் கட்டப்பட்டிருந்தன.செல்வபுரம், கோவைப்புதுார் பகுதியில் புதிதாக போடப்பட்ட ரோட்டில், ஜம்பர்களால் துளையிட்டு, கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பில், எம்.ஜி.ஆர்., - ஜெ., - இ.பி.எஸ்., -ஓ.பி.எஸ்., - வேலுமணி ஆகியோரது, பிரமாண்டமான 'கட்-அவுட்'டுகள் வைக்கப்பட்டிருந்தன.


இதேபோன்ற 'கட்-அவுட்'டுகள் வடவள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. பாலக்காடு மெயின் ரோட்டில், தனி தனி 'கட்-அவுட்'டுகள் ரோட்டின் ஓரத்தில் வைத்திருந்ததனர். 'கட்-அவுட்'டுகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கோர்ட் உத்தரவை மீறிய செயல் என்று நன்கு தெரிந்திருந்தும், ஆளுங்கட்சியினரே வைத்திருந்தது, பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
24-ஜன-202109:23:00 IST Report Abuse
pattikkaattaan தினமலர் இதை தலைப்பு செய்தியாக போட்டிருக்கவேண்டும் ... இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குவது ?.கட்-அவுட் வைத்தால்தான் இந்த தலைவர்களை மக்களுக்கு தெரியுமா ?.. கொடுமை
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202108:28:47 IST Report Abuse
Mani . V நம்புவோம், இந்த யோக்கிய சிகாமணிகள்தான் சட்டத்தை பாதுகாக்கப் போகிறார்கள். என்ன எழவு சட்டமோ? - இவர்களை கைது செய்து சிறையில் தள்ள முடியாமல். ஓகே அடுத்த கட் அவுட் கொலைக்கு நாமும் காவல்துறையும் காத்திருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X